1.உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வரிகள் தேடித்தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் கவிதை


2. நீ வயசுக்கு
வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்க்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள் நீ


3. உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான் சாலயோர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின்
மௌனத்திலும்
இசை கேட்க ஆரம்பித்தேன்
நான்

4.கண்களை
வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்

கண்களை
வாங்கிக்கொன்டு

உன்னைப் போல்
கண்கள் தருகிறவள் தான்
தோழியாகிறாள்